9 வயது சிறுமியை மிரட்டி வீடியோ

X
. கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 வயது சிறுமியை மிரட்டி வீடியோ பதிவு செய்த பெண் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நாகர்கோவிலில் உள்ள என்.ஜி.ஓ காலனியில் நடைபெற்றது. சிறுமியின் பெற்றோர் சிவகுமார் - பத்மஶ்ரீ தம்பதியினர். சிவகுமார் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பத்மஶ்ரீ தங்கள் புதிய வீட்டை பார்வையிட சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டு பெண் ராஜிலா என்பவர் பத்மஶ்ரீயின் 9 வயது மகளை அழைத்து, “ஒருவர் மீது பாலியல் புகார் கூற வேண்டும்” என மிரட்டி, வீடியோ பதிவுசெய்துள்ளார். பயந்த சிறுமி வீடியோவில் அவர் சொல்வதை பேசி விட்டுள்ளார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் பத்மஶ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜிலாவை தேடி வருகின்றனர்.
Next Story

