9-ஆம் வகுப்பு மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை.

9-ஆம் வகுப்பு மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை.
X
பாண்டமங்கலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.
பரமத்திவேலுார்,மே.24: நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(42), இவர் பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறார். பாண்டமங்கலம் பகுதியில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு கடந்த சில ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் அங்கு படித்த பள்ளி மாணவிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறியுள்ளார் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணி விளையாட்டு ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் விளையாட்டு ஆசிரியர் மணிகண்டனை தேடி வீட்டுக்கு சென்றபோது தகவல் அறிந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story