9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

TAPS திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதம் பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதம் பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், வருவாய்த் துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Next Story