9 கிலோ கஞ்சா, 7.1/2 கிலோ குட்கா பறிமுதல்

X
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு புருலிய - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வந்தபோது திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் 9 கிலோ கஞ்சா, 7.1/2 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

