திருத்தணியில் 9 கிலோ குட்கா பறிமுதல்.
பைல் படம்
திருத்தணி அடுத்த தாழவேடு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலர் மற்றும் திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி தாழவேடு பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஏழுமலை மனைவி தமிழ்செல்வி, 60, என்பவர் கடையில் ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர். கடைக்கு சீல் வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல், திருவாலங்காடு ஒன்றியம், சிவாடா மேட்டுக்காலனி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக எஸ்.பி., சீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட அளவிலான தனிப்படை எஸ்.ஐ.,குமார் தலைமையிலான போலீசார் மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சிவா, 29 என்பவர் கடையில் பதுக்கி வைத்திருந்த, ரூ.10,000 மதிப்புள்ள 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.