அரியலூரில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 9 பேர் கைது

அரியலூரில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 9 பேர் கைது

நாம் தமிழர் நிர்வாகி

அரியலூரில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 9 பேரை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று மதியம் நாம் தமிழர்கட்சியின் சார்பில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் அறிவித்திருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து பலரும் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

திருமானுர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் கி. குமார், தா,பளூரில் மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் மற்றும் தமிழ்மாறன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள்.

பல மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளது அடுத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்ற உத்தரவு பெற்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Tags

Next Story