திண்டிவனம் பகுதியில் விதிகளை மீறிய 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

திண்டிவனம் பகுதியில் விதிகளை மீறிய 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

திண்டிவனம் பகுதியில் விதிகளை மீறிய 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனம் பகுதியில் விதிகளை மீறிய 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் விதிகளை மீறி இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களை தமிழகத்தில் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து விதிகளை மீறி இயக்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டிவனம் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராஜன், முருகவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் மொரட்டாண்டி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெளிமாநில பதிவு எண் கொண்ட 9 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story