வீடு புகுந்து 9 சவரன் நகை கொள்ளை சங்கராபுரம் அருகே துணிகரம்
திருட்டு
சங்கராபுரம் அருகே வீடு புகுந்து 9 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீடு புகுந்து 9 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி விசாலாட்சி, 55; கணவரை இழந்தவர். 2 மகன்கள், கள்ளக்குறிச்சியிலும், மற்றொருவர் துபாயிலும் உள்ளனர். விசாலாட்சி கீழப்பட்டில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை விசாலாட்சி எழுந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 9 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. தகவல் அறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து வீடுபுகுந்து திருடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
Next Story