விராலிமலை பகுதிகளில் 9 கண்காணிப்பு கேமராக்கள்

விராலிமலை பகுதிகளில் 9 கண்காணிப்பு கேமராக்கள்

திறப்பு

விராலிமலை பகுதிகளில் 9 கண்காணிப்பு கேமராக்கள் நடைபெற்றது.

விராலிமலை சுற்று பகுதியில் குற்றங்களை கண்காணிக்கும் விதமாக தனியார் நிறுவனம் சார்பில் ரூபாய் 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட 9 கண்காணிப்பு கேமராக்களின் தொடக்க விழா நடைபெற்றது.

வர்த்தகங்கள் தொழில் நிறுவனங்கள் உதவியோடு கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படுவதன் தொடர்ச்சியாக விராலிமலை திருச்சி சாலையில் உள்ள உணவு பொருள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமான ஐடிசி நிறுவனம் தனது சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் மூலம் 9 கேமராக்கள் மற்றும் தொடர்புடைய கருவிகளை ரூபாய் 5 லட்சத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் விராலிமலை காவல் நிலையத்திற்கு வழங்கியது. இதையடுத்து அந்த கேமராக்களை மாதிரி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலை பிரிவு சாலை ராஜாளிபட்டி ஜங்ஷன், புதுப்பட்டி சாலை ஜங்ஷன், ஆகிய இடங்களில் பொருத்தி அதன் தொடக்க விழா விராலிமலை காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற டிஎஸ்பி காயத்ரி கண்காணிப்பை தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஐடிசி பொது மேலாளர் விஸ்வநாத், அடமின் மேலாளர் சுரேஷ், கதிரவன், துணை ஆய்வாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story