90 சதவீதம் பணி முடிவுற்ற நிலையில் திறப்பு விழா காணாத ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகம்

90 சதவீதம் பணி முடிவுற்ற நிலையில் திறப்பு விழா காணாத ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகம்
X
90 சதவீதம் பணி முடிவுற்ற நிலையில் திறப்பு விழா காணாத ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகம் உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
அரியலூர் டிச.23- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்  ஏற்கெனவே சட்டமன்ற தொகுதியாக இருந்த ஒன்று. ஆனால் அதன் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையத்தை சார்ந்தே இருந்தது.  இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் தேர்தல் வாக்குறுதி அளித்த போல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆண்டிமடம் தனி தாலுக்கவாக அறிவிக்கப்பட்டது. 2018- 19 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2.25 கோடி நிதியை தாலுக்கா அலுவலக கட்டிடம் அமைக்க ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில் இந்த கட்டிட பணி 90 சதவீதம் முடிந்த நிலையில்  நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் இந்த கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கட்டிடத்தை சுற்றிலும் கருவேல முள் மரங்கள் சூழ்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கட்டிடத்தின் முகப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது இயங்கி வரும் தாலுக்கா அலுவலக கட்டிடம் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் சென்று தங்கள் பணியை செய்து வருவதில் சிரமம். மேலும் இடம் பற்றாக்குறை காரணமாக அலுவலர்களும் பணி செய்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
Next Story