90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த டிராக்டர் விவசாயி பலி

90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த டிராக்டர் விவசாயி பலி
X
நத்தம் அருகே ராக்கம்பட்டியில் 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த டிராக்டர் விவசாயி பலி- 6 மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் -மகன் கண்முன் நடந்த கொடூரம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பிள்ளையார்நத்தம் ராக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் (45). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிறுத்தியிருந்த தனது டிராக்டரை எடுக்கச் 15 வயது மகனுடன்  சென்றுள்ளார். தோட்டத்தில் நிறுத்தி இருந்த டிராக்டரை எடுத்த போது  டிராக்டரில் டபுள் கியர் விழுந்துள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பின்னால் சென்று  அருகிலுள்ள விவசாயக் கிணற்றுக்குள் கருப்பன் டிராக்டருடன் விழுந்து விட்டார்.  இது குறித்து அவரது மகன் ஊருக்குள் சென்று தெரிவித்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நத்தம் மற்றும் திண்டுக்கல்  தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள், மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் வீரர்கள் குழு 90 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் 40 அடி தண்ணீரின் கீழ் சகதிகளில் சிக்கிக் கொண்ட  கருப்பனின் உடலைத் தேடினர். மதியம் தொடங்கிய தேடுதல் 6 மணி நேர தேடுதலுக்குப் பின்பு இரவு பல மணி நேர  போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கருப்பணின் உடலை மீட்டனர். இதனால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கருப்பணின் உடலை பிரேத பரிசோதனைக்கு நத்தம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story