தமிழகத்தில் 90 சதவீதம் குற்றங்கள் போதையில் நடக்கிறது -சீமான்
தமிழகத்தில் 90 சதவீதம் குற்றங்கள் போதையில் நடக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பன்சத்திரத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையில் ஈடுபட்ட சீமான் , ஆட்சி , அதிகாரத்தில் நடக்கும் ஆக்கிரமங்களை எதிர்க்க வந்துள்ளதாகவும். உண்மையில் நேர்மை எங்கு இருக்கிறதோ அங்கு போய் சேரலாம் என்றார். கடைசி இரண்டு நாளில் கட்சிகள் வீடு வீடாக பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைப்பதாகவும் , . இதனால் இரண்டு , ஜந்து நாள் வறுமையை போக்கலாம்.ஆனால் ஜந்தாண்டு வறுமையை போக்க முடியாது என்றார்.
தீரன் சின்னமலை உலகின் சிறத்த புரட்சியாளர் என்ற சீமான் , .அவருக்கு அடுத்த புரட்சியாளர் பிரபாகரன் என்றும் தமிழ்நாடு என்ற பெயர் எதற்கு.ஆனால் தமிழில் பெயர்கள் இல்லை என றார். தமிழர்கள் உழைப்பை விட்டு வெளியேறுவதால் வட இந்தியர்கள் அதிகளவில் வந்துள்ளதாகவும் உழைப்பை மேம்படுத்த டாஸ்மாக்கை மூட வேண்டும் என்றும் தமிழகத்தில் 90 சதவீதம் குற்றங்கள் போதையில் நடப்பதாகவும் , போதை பொருள் நடவடிக்கையில் ஜாபர் சாதிக் , அமீர் ஆகியோர் சிறுபான்மையினர் என்பதால் மத்திய அரசுஙநடவடிக்கை எடுககிறது. மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். சீமான் சிவப்பாக இருந்தால் இந்திய நாட்டின் பிரதமர் நான் தான் என கூறி மைக் சின்னத்திற்கு வாக்களிக்கக்கோரினார்.