சிவகங்கையில் 90 சதவிகித பேருந்துகள் இயக்கம்
பேருந்து இயக்கம்
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து தொழிற்ச்சஙகங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று அறிவித்தன.
இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 32 தொலைதூர பேருந்துகளும், 34 நகர பேருந்துகளும் 38 தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து பணிமனையிலிருந்து தற்போது வரை 90 சதவீத பேருந்துகள் எந்த வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்கு மேலாகவே ஓட்டுநர்கள் நடத்துனர்களின் சிப்ட்கள் மாற்றம் உள்ளதால் அதற்கு பின்னரே போராட்ட அறிவிப்பின் தாக்கம் வெளியே தெரியும் என போக்குவரத்து தொழிலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.