மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 90% மின் இணைப்பு
90% மின் இணைப்பு
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 90% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல்
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 90% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்களில் பெய்த மிக கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் முத்தம்மாள் காலனி ஆதிபராசக்தி நகர் அம்பேத்கர் நகர் ஸ்டேட் பேங்க் காலனி விஎம்எஸ் நகர் ராஜு நகர் முருகேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது . இதனால் மின்சாரம் தாக்கி யாரும் பலியாகி விடக்கூடாது என்பதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சார ட்ரான்ஸ்ஃபாரம் மின் கம்பங்கள் மழை வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டது தற்போது மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார ட்ரான்ஸ்பார்ம் மற்றும் மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பாக முத்தம்மாள் காலனி வி எம் எஸ் நகர் குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று தங்கள் வீட்டின் மின் அளவீடு செய்யும் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதா என்பதை பார்த்து மூழ்கி இருந்தால் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு அந்தந்த பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதிபராசக்தி நகரில் மின்னிணைப்பு கொடுப்பதற்காக மின்சார ஊழியர்கள் பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story