மின்சாரம் திருடியவருக்கு ரூ. 90 ஆயிரம் அபராதம்

மின்சாரம் திருடியவருக்கு ரூ. 90 ஆயிரம் அபராதம்
கோப்பு படம்
திருச்சி திருவானைக்கா அருகே மின்சாரம் திருடியவருக்கு ரூ. 90,000 அபராதம் விதித்துள்ளனா்.
திருச்சி திருவானைக்கா அருகேயுள்ளது உத்தமா்சீலி ஊராட்சியைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவா் தனது வீட்டருகே உள்ள மின் கம்பியிலிருந்து முறைகேடாக இணைப்பை ஏற்படுத்தி மின்சாரம் திருடி வருவதாகப் புகாா் வந்தது. அதன்பேரில் மின்வாரிய அலுவலா்கள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் அவா் மின்சாரம் திருடியது உறுதியானது. இதையடுத்து அவா் பயன்படுத்திய மின்சாரத்துக்கு கட்டணத்துடன் சோ்த்து ரூ. 90,000 அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.

Tags

Next Story