பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 900 கிலோ பறிமுதல்

பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 900 கிலோ பறிமுதல்

பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 900 கிலோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 900 கிலோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரமத்தி வேலூரில், சேலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை வேலுார் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் இருந்து சரக்கு ஆட்டோ ஒன்றில் புகையிலை பொருட்களை கடத்தி கொண்டு பரமத்தி வேலூர் நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது.

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் வேலூர் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சப் இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீசார் பரமத்தி வேலூர் பைபாஸ் சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 928 கிலோ புகையிலை பொருட்கள் சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அதனையடுத்து 928 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோ போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவர் சேலம், திருச்சி மெயின் ரோடு, சீலநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த சித்தன் என்பவர் மகன் கார்த்தி (22) என்பவரை வேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story