தருமபுரி மாவட்டம் 90.45 சதவீதம் தேர்ச்சி

தருமபுரி மாவட்டம் 90.45 சதவீதம் தேர்ச்சி

தருமபுரி மாவட்ட கல்வி அலுவலகம்

தர்மபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தின் தேர்ச்சி விபரம் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9 மணி அளவில் வெளியாகி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் 10ம் வகுப்பு தேர்ச்சி விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில்,தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவிகள்-20651,தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகள்-18679,தேர்வு எழுதிய மாணவர்கள்-10593,தேர்வு எழுதிய மாணவிகள்-10058,தேர்ச்சி பெற்ற மாணவர்கள்-9270,தேர்ச்சி பெற்ற மாணவிகள்-9409,மாணவர்கள் சதவிகிதம்-87.51%,மாணவிகள் சதவிகிதம் மொத்தம்-93.55%,மொத்தம் தேர்ச்சி விகிதம்-90.45%. மேலும் தமிழக அளவில் தர்மபுரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 28 வது இடம் பிடித்துள்ளது. இவ்வாறு தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story