மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.31லட்சத்தில் உபகரணங்கள்
13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.31லட்சத்தில் உபகரணங்கள்
உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 9.31 லட்சம் மதிப்பில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கினார். கல்லூரி உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை கை, கால் உபகரணங்கள் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 9.31 லடசம் மதிப்பிலான வழங்கப்பட் டன. இவ்விழாவில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, துணை முதல்வர் என். ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, உடலியல் மருத்துவம் மற்றும் புணர்வு வாழ்வுத் துறைத் தலைவர் ச.குமரவேல்வரவேற்றார். மருத்துவர் து. பாலமுரளி நன்றி கூறினார்.
Next Story