கெங்கையம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.94 லட்சம்

கெங்கையம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.94 லட்சம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ரூ.94 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.  

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ரூ.94 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் கடந்த 13-ந் தேதி நடந்தது. 14-ந் தேதி அம்மன் சிரசு திருவிழாவும், 16-ந் தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். திருவிழாவையொட்டி கெங்கையம்மன் கோவிலில் சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டது. இந்த உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணத்தை எண்ணும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஆய்வாளர் எஸ்.பாரி, ஊர்நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் விழாக் குழுவினர், பக்தர்கள், கோவில் ஊழியர்கள், இளைஞர் அணியினர், பொதுமக்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.9 லட்சத்து 83 ஆயிரத்து 384-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Tags

Next Story