விருதுநகரில் 94 சதவீத பேருந்துகள் இயக்கம்

விருதுநகரில் 94 சதவீத பேருந்துகள் இயக்கம்

விருதுநகரில் 94 சதவீத பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக போக்குவரத்து ஊழியர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விடுதுநகர் மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் உள்ள 418 பேருந்துகளில் தற்போது 393 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், திமுக தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் முக்கிய வழிதடங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்கும் சூழலும் நிலவி வருகிறது.

Tags

Next Story