பிளஸ் 1 தேர்வில் 94.28% மாணவ மாணவியர்கள் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வில் 94.28% மாணவ மாணவியர்கள் தேர்ச்சி

பைல் படம் 

மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 94.28% பேர் தேர்ச்சியடைந்தனர்.

குமரி மாவட்டத்தில் பிளஸ் -1 தேர்வில் 93.96 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10,890 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 10,195 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 93.62 சதவீதமாகும். மாணவர்கள் 5 ஆயிரத்து 124 பேர் தேர்வு எழுதியதில் 4,594 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 89.66 சதவீதம் ஆகும். மாணவிகள் 5,766 தேர்வில் 5,601 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 97.14 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு இந்த கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றனர்.

மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11,389 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 94.28 சதவீதமாகும். மாணவர்கள் 5 ஆயிரத்து 682 பேர் தேர்வு.எழுதியதில் 5,162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 90.85 சதவீதமாகும். மாணவிகள் 5,707 பேர் தேர்வு எழுதியதில் 5,576 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97.7 சதவீதம் ஆகும். இந்த கல்வி மாவட்டத்திலும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.நாகர்கோவில், மார்த்தாண்டம் இரு கல்வி மாவட்டத்திலும் மார்த்தாண்டம் கல்வி மாவட்டம் பிளஸ்-1 தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

Tags

Next Story