மகளிர் உரிமைத்தொகை 95% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது:ஜோதிமணி

மகளிர் உரிமைத்தொகை 95% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது:ஜோதிமணி

வாக்கு சேகரித்த ஜோதிமணி

மகளிர் உரிமைத்தொகை நூறு பேரில் 95 சதவிகிதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்- ஜோதிமணி.

மகளிர் உரிமைத்தொகை நூறு பேரில் 95 சதவிகிதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்- ஜோதிமணி. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி போட்டியிடுகிறார்.

இன்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். இறுதியாக சேங்கல் கடைவீதி பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்ட வேட்பாளர் ஜோதிமணி, அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசும்போது,

தமிழக முதலமைச்சரின் மகளிர் உரிமை திட்டத்தில், இதுவரை உத்தேசமாக 100 பேரில் 95 பேருக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டுள்ளது. உரிமை தொகை பெறாத நபர்களை அடையாளம் கண்டு, ஒன்றிய செயலாளர் ரவி ராஜா பட்டியல் அளித்த பிறகு, மீதமுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கும் விரைவில் தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும் என்றார்.

மேலும், பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு தமிழக முதல்வரின் திட்டத்தின் படி உணவும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags

Next Story