போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 95 பேர் குணம்

போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 95 பேர் குணம்

அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தற்போது வரை 95 பேர் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.


அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தற்போது வரை 95 பேர் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி 2024-ம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் இராஜபாளையம், விருதுநகர் மற்றும் காரியாபட்டி அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனை, இராஜபாளையத்தில் 6 படுக்கை வசதியுடனும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகரில் 5 படுக்கை வசதியுடனும் மற்றும் அரசு மருத்துவமனை, காரியாபட்டியில் 4 படு;க்கை வசதியுடனும் செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகளாக தற்போது வரை 95 நோயாளிகள் மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்ற அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள குடி மற்றும் போதை தொடர்பான சிகிச்சை தேவைப்படுவோர் போதை சிகிச்சை பிரிவினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மனநலம் சம்பந்தமான ஆலோசனைக்கு மாவட்ட மனநல ஆலோசனை மையம் கைபேசி எண்:8300263423 –ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story