957 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் வழங்கினார்.
Perambalur King 24x7 |18 Aug 2024 5:06 AM GMT
நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் (17.08.2024) நடைபெற்றது. இது குறித்து கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் தெரிவிக்கையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 957 பயனாளிகளுக்கு ரூ.28,10,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்களின் பாதுகாப்பினை கருதி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் தொழிலாளர் நல வாரியத்தில் விதிமுறைகளை திருத்தி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றைக்குமே நாம் நன்றி உடையவர்களாக இருப்பது தான் இது போன்ற திட்டங்களை அறிவித்ததற்கு நாம் வழங்கும் நன்றிக்கடனாக இருக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் 957 பயனாளிகளுக்கு 28,10,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் வழங்கினார்.
Next Story