963 கிலோ கஞ்சா எரிப்பு.
மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 229 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 963.080 கிலோ கிராம் கஞ்சாவை, போதைப்பொருட்கள் ஒழிப்பு குழு தலைவர் (DRUG DISPOSAL COMMITTEE) மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் , அவர்கள் மற்றும் உறுப்பினர்களான மதுரை மாநகர் வடக்கு மாவட்ட துணை ஆணையர் அனிதா , தடய அறிவியில் ஆய்வக உதவி இயக்குநர், மதுரை மாநகர் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் ஆகியோர்களின் முன்னிலையில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களின் அறிக்கையுடன் அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி பெறப்பட்ட நீதிமன்ற ஆணையுடன் நேற்று (16.07.2025) திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ASEPTIC SYSTEMS தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கப்பட்டது
Next Story




