18,216 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.96.84 கோடி வங்கி கடன்

18,216 மகளிர் சுய உதவி குழுவினருக்கு  ரூ.96.84 கோடி வங்கி கடன்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

சேலத்தில் நடந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 18216 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96 கோடியே 84 லட்சம் வங்கிக் கடன் உதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்காவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 18 ஆயிரத்து 216 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96 கோடியே 84 லட்சம் வங்கிக் கடன் உதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:- மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 13 ஆயிரத்து 799 குழுக்கள், நகர்ப்புற பகுதிகளில் 7 ஆயிரத்து 83 குழுக்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 882 குழுக்கள் உள்ளன. இதில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 943 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு வருடம் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.96¾ கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு ரூ1,124 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை ரூ.1,109 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story