97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.

X
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் மாநில ஆணையத்தலைவர் அருட்தந்தை.சொ.ஜோ அருண், சே.ச அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மேலும், இன்றைய தினம் (08.04.2025) மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் கடனுதவியும், ஸ்ரீ லெட்சுமிநாராயணா கூட்டுறவு நகர வங்கி லிட்;, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் (டாம்கோ) மூலம் டாம்கோ கடனும், கிறிஸ்துவர் நல வாரிய அட்டையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் இயற்கை மரணம் (ம) ஈமச்சடங்கிற்கான உதவித்தொகைக்கான ஆணையும், ஓய்வூதிய உதவித்தொகையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலி கருவியும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி) பிரிவு சார்பில் பணிநியமன ஆணையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நுண்ணீர் பாசன திட்டமும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டையும், வேளாண்மைத்துறையின் சார்பில் திரவ பாஸ்போ பாக்டீரியா, பருத்தி நுண்ணூட்டம் என மொத்தம் 6 துறைகளைச் சார்ந்த 177 சிறுபான்மையினர் வகுப்பை சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.97 இலட்சத்து 81 ஆயிரத்து 517 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஹேமில்டன் வில்சன், நாகூர் ஏ.எச்.நஜ்முதீன்,ராஜேந்திர பிரசாத், .எஸ்.வசந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் இரா.சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

