திருப்பூர் காங்கேயம்ரோட்டில் 97,800 ரூபாய் பறிமுதல்!

திருப்பூர் காங்கேயம்ரோட்டில் 97,800 ரூபாய் பறிமுதல்!

திருப்பூர் காங்கேயம் ரோட்டில் ஆவணங்கள் இல்லாமல் 97,800 ரூபாய் கொண்டு சென்றவரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர் காங்கேயம் ரோட்டில் ஆவணங்கள் இல்லாமல் 97,800 ரூபாய் கொண்டு சென்றவரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சாலை டி எஸ் கே மருத்துவமனை எதிரில் உள்ள குறுக்கு சாலையில் துணை மாநில வரி அலுவலர் பக்கிரிசாமி என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சஞ்சய் என்பவரது இரண்டு சக்கர வாகனத்தில் சோதனை செய்த போது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 97 ஆயிரத்து 800 கொண்டு சென்றது தெரிய வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலைக்குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் கணக்கு (பொ) தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

Tags

Next Story