பக்தர்கள் செலுத்திய காணிக்கை 98 லட்சம்

சித்திரை திருவிழாவில் கொண்டுவரப்பட்ட அழகர் கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டன.
பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடந்து முடிந்தது இதில் மதுரை வண்டியூர் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரம் கள்ளழகர் பெருமாள் சென்று 400க்கும் மேற்பட்ட மண்டபங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து திரும்ப கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார் இந்த திருவிழாவை ஒட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 39 உண்டியல் பெட்டிகள் மதுரை வரை சென்று கோவிலுக்கு திரும்பியது இந்த உண்டியல்கள் கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் திறந்து என்னப்பட்டது இதில் 98 லட்சத்து 62978 ரூபாய் ரொக்கமும் ஒன்பது கிராம் தங்கமும் 125 வெள்ளியும் வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தனர் உண்டியல் திறப்பின்போது கோவில் துணையை ஆணையர் கலைவாணன் உதவி ஆணையர் வளர்மதி ஆய்வாளர் ஐயம்பெருமாள் அரங்காவலர்கள் பாண்டியராஜன் செந்தில் குமார் மீனாட்சி மற்றும் அறங்காவலர் குழு உட்பட பல உடன் இருந்தனர்

Tags

Next Story