இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 ஆம் ஆண்டு துவக்கவிழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 ஆம் ஆண்டு துவக்கவிழா

கொடியேற்றம் 

சிவகங்கையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99ஆம் ஆண்டு துவக்க விழா கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பேரவை கூட்டம் சிவகங்கை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னையா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு மற்றும் அர்ப்பணிப்பு போராட்டங்கள், கொள்கைகள் ஆகியவை சம்பந்தமாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இதில், சிவகங்கை புதிய பேருந்து நிலையம் கட்டும் கட்டுமான பணியில் தரமற்ற கட்டிடம் கட்டப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமற்ற கட்டிடம் என உறுதி செய்யப்பட்ட நிலையில் கட்டிட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சிவகங்கை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என மக்கள் ஒன்று திரண்டு நடத்திய மாபெரும் போராட்டத்தையும், கோரிக்கையையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சிவகங்கை மக்களை புறக்கணித்து வருவதை கண்டித்தும், தெருவோர வியாபாரிகளிடம் அடாவடி வசூல் செய்யும் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சிவகங்கை மருத்துவக் கல்லூரியை சுற்றியும், பழைய மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடத்துக்கு முன்பும், மண்டியுள்ள வேலிக்கருவேல் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த கோரியும், மக்கள் நடமாட்டம் அதிகமாகவும், பெண்கள், குழந்தைகள் பள்ளிக்கு சென்று வரும் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags

Next Story