ஸ்ரீ சர்வசத்தி மாரியம்மன் கோயிலில் 9வது நாள் சிறப்பு பூஜை

ஸ்ரீ சர்வசத்தி மாரியம்மன் கோயிலில் 9வது நாள் சிறப்பு பூஜை

சங்ககிரியில் ஆசிரியர் காலனி ஸ்ரீ சர்வசத்தி மாரியம்மன் கோயிலில் 9வது நாள் சிறப்பு பூஜை நடந்தது.


சங்ககிரியில் ஆசிரியர் காலனி ஸ்ரீ சர்வசத்தி மாரியம்மன் கோயிலில் 9வது நாள் சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ சர்வசித்தி மாரியம்மன் கோயிலில் பொங்கல்விழாவின 9வது நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ சர்வசித்தி மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா ஏப்.23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. அதனையடுத்து சுவாமிக்கு பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செயய்ப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றது .இதனையடுத்து 9வது நாளையொட்டி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருங்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சங்ககிரி, ஆசிரியர் காலனி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். கோயில் வளாகத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..

Tags

Next Story