தலைவாசல் அருகே 10 அடி நீள மலை பாம்பு சிக்கியது

தலைவாசல் அருகே 10 அடி நீள மலை பாம்பு சிக்கியது
பிடிபட்ட மலை பாம்பு
தலைவாசல் அருகே 10 அடி நீள மலை பாம்பு சிக்கியது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி, ராமானுஜபுரம் கிராமத்தில் மணி என்பவரது தோட்டத்தில், நேற்று தொழிலாளர்கள் கரும்பு அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்குள் 10 அடி நீள மலை பாம்பு ஒன்று இருந்தது.

இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி, மலை பாம்பைபிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர் அவர்கள் கல்வராயன் மலைப்பகுதியில் விடுவித்தனர்.

Tags

Next Story