10அடி அளவிலான திடீர்பள்ளம்!

10அடி அளவிலான திடீர்பள்ளம்!

திருப்பத்தூர் அடுத்த கந்திலி சாலை நடுவே ஏற்பட்ட 10அடி அளவிலான திடீர்பள்ளம் பண்டக்குழியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


திருப்பத்தூர் அடுத்த கந்திலி சாலை நடுவே ஏற்பட்ட 10அடி அளவிலான திடீர்பள்ளம் பண்டக்குழியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி சாலை நடுவே ஏற்பட்ட 10அடி அளவிலான திடீர்பள்ளம்! பண்டக்குழியாக இருக்கலாம் என தகவல்! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மட்றபள்ளி மசூதி தெரு பகுதியில் சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மசூதி தெரு பகுதியில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில் நேற்று தண்ணீர் வண்டி ஒன்று சென்றுள்ளது. அப்போது திடீரென சாலை நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது அதில் சக்கரம் மாட்டிக்கொண்ட நிலையில் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி வண்டியை எடுத்துச் சென்றனர்.

அப்போது சிறிய குழியாக இருந்த இந்த பள்ளம் இன்று காலை பார்க்கும் பொழுது சுமார் 10 அடி அளவிலான சுரங்கம் போல பள்ளம் ஏற்பட்டுள்ளது இது குறித்து அப்பகுதி முன்னோர்கள் கூறுகையில் இது பண்டைய கால பண்டகக்குழியாக இருக்கலாம் மேலும் கந்திலி சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை மூன்று பண்டககுழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். இதனை காண அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

Tags

Next Story