நல்லம்பள்ளி அருகே 10 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை

நல்லம்பள்ளி அருகே 10 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை

கைதான மாணவன்

நல்லம்பள்ளி அருகே 10 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மிட்டாரெட்டிஅள்ளி பகுதி சேர்ந்த மன்மதன் மற்றும் சீதா இவர்களது பத்து வயது மகன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.

அதே ஊரை சேர்ந்த இளங்கோ என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மாங்காய் பறிக்கலாம் என கூறி சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறுவன் வெளியில் கூறினால் தான் மாட்டிக் கொள்ள கூடும் என அறிந்து இளங்கோ அருகில் இருந்த கிணற்றில் சிறுவனை தள்ளி கொலை செய்துள்ளார். சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமரா பதிவுகளில் இளங்கோ சிறுவனை அழைத்துச் செல்லும் வீடியோ பதிவு வெளியானது.

இளங்கோவை காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர் சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தது உறுதியானது. நேற்று நள்ளிரவு சிறுவனின் உடல் கிணற்றிலிருந்து நீக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி பதற்றமாக உள்ளது காவல்துறையினர் அன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story