19 வயது கல்லூரி மாணவி 5 மாத கர்ப்பம்; திருச்சி கலெக்டரிடம் மனு

திருச்சியில் 19 வயது கல்லூரி மாணவி 5 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்குமாறு, திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தார்.

திருச்சி மாவட்டம், பனையபுரத்தை சேர்ந்த சங்கீதா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடன் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த, திருவள்ளசோழலை பகுதியை சேர்ந்த பாலாஜி (20 ), இவர் சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக தொடர்ந்த பழக்கவழக்கம், காலப்போக்கில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வதும் தனியே சந்தித்துக் கொள்வதும் போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேலாக பாலாஜி என்பவர், உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து உள்ளார்.பின்பு தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாலாஜி என்பவரிடம்,பாதிக்கப்பட்ட சங்கீதா நான் கர்ப்பமாக உள்ளேன் என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பாலாஜி என்பவர் உடனடியாக கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பத்தை கலைக்க முடியாது உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் பாலாஜி குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவருடைய குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும், பணம் தருகிறோம் கர்ப்பத்தை கலைத்து விடு எங்கள் பையன் உங்க வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

ஆகையால் மனம் உடைந்த அந்தப் பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் பணிபுரிய காவலர்கள் உரிய முறையில் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை இதுவரை, நாங்கள் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். ஆகையால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டநாளில், பாதிக்கப்பட்ட பெண் அவருடைய குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்மாரிடம் புகார் மனு அளித்தனர். புகார் மனுவை படித்துப் பார்த்துவிட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story