குரு கோவிலில் 25 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்

குரு கோவிலில் 25 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்

குறுகிய சாலை


காஞ்சிபுரம் தாயார்குளம் அருகில், குரு கோவில் எனப்படும் காயரோகணேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் மற்றும் விசேஷ நாட்களில் 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் அமைந்துள்ள சாலையில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், 10 அடிக்கும் மேலாக, சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர்.

இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனம், கார், லாரி போன்ற வாகனங்கள் எளிதாக இயக்க முடியாத நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளால், அவ்வழியாக மின் தடம் அமைப்பதற்கும், மின்வாரிய பணிகள் மேற்கொள்வதிலும் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். தாயார்குளம் நான்கு முனை சந்திப்பில் இருந்து கிருஷ்ணன் தெரு வரை, 25 அடிக்கும் மேலாக அகலம் கொண்ட இச்சாலை, 15 வரை மட்டுமே உள்ளது. பல இடங்களில், குறுகியும், நீண்டும் உள்ளது.

இச்சாலையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், சாலையை ஆக்கிரமித்து கடைகள், திண்ணை போன்றவற்றை கட்டியுள்ளனர். எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட இச்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Tags

Next Story