சோழப்பேரேரி கண்மாயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன்பிடி திருவிழா

சோழப்பேரேரி கண்மாயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன்பிடி திருவிழா

மீன்பிடி திருவிழா

மேலூர் அருகே திருவாதவூர் சோழப்பேரேரி கண்மாயில் 400 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான பெரியவகை நாட்டு மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து மகிழ்ந்தனர்.

மதுரை மாவட்டம் , மேலூர் அருகே, திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் பெரிய கண்மாய் என்று அழைக்கக்கூடிய சோழப்பேரேரி கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விவசாய பணிகள் முடிந்தவுடன், இக்கண்மாயில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா நடைபெறும். அதன்படி, 400 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறும் என கிராமத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, திருவாதவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேலூர், இடையப்பட்டி, கொட்டக்குடி, ஆண்டிபட்டி, தெற்குதெரு, ஆமூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் நள்ளிரவு முதல் காத்திருந்து, அதிகாலை கிராம பெரியவர்கள் கோவிலில் வழிபாடு நடத்தி வெள்ளை வீசி, கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, மீன்பிடி திருவிழாவில் பங்கேற்க வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாங்கள் வைத்திருந்த, கச்சா, வலை, உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இதில், கட்லா, ரோகு, சிலேபி, விரால் என பல்வேறு வகையான நாட்டுரக மீன்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பிடித்து மகிழ்ந்தனர். பிடிக்கப்பட்ட மீன்களை வீட்டில் கொண்டு சென்று சமைத்து, சாமிக்கு படைத்த பின் தங்கள் உண்பதாக மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story