நாடகமாடி 5 பவுன் தாலி செயின் பறிப்பு

முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயினை பறித்து சென்ற கேரளா இளைஞர்கள் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் அருகே சூழக்கரை திரு.வி.க நகரை சேர்ந்த கோதையாண்டாள் என்ற 72 வயது மூதாட்டி கடந்த 26.04.2024ம் தேதி காலை தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத பைக்கில் வந்த இரு நபர்கள் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக மூதாட்டி கோதையாண்டாள் அளித்த புகாரில் சூலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அருகில்2இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் அருகே பட்டம்புத்தூரில் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரம்ஜாத் 23, என்பவரை நிறுத்தி விசாரணை செய்ததில் கடந்த மாதம் 26ம் தேதி மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இவரது நண்பர் முகம்மது ஷான் 24, என்பவருடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதும் முகம்மது ஷான் கேரளாவில் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி அங்குள்ள நெய்யாற்றின் கரா சிறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை இன்று கேரளா மாநில சிறையிலிருந்து கைது செய்து அழைத்து வந்து இருவரையும் விருதுநகர் நீதிதுறை நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு பின் செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரளா இளைஞர்கள் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags

Next Story