தேன்கனிக்கோட்டை வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு

தேன்கனிக்கோட்டை வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு

பிடிபட்ட பாம்பு

தேன்கனிக்கோட்டை வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை விஜய் நகரில் வசித்து வருபவர் மருத்துவர் சுப்பிரமணியன் (50) இவரது வீட்டின் அருகே டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு பாம்பு வீட்டில் மதில் சுவரை தாண்டி வீட்டுக்குள் நுழைந்துள்ளது. இதனைப்பார்த்த மருத்துவர் சுப்பிரமணியன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் புகுந்த பாம்பு பூஜை அறைக்குள் நுழைந்து அங்கிருந்த சுவாமி படத்தின் பின்புறத்தில் பதுங்கி கொண்டது. அச்சமடைந்த மருத்துவரின் குடும்பத்தினர் உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ரோகித் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த அவர் பூஜை அறையில் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள பாம்பை இடிக்கி மூலம் இலாவகமாக பிடித்தார். இதனால் மருத்துவரின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட அந்த பாம்பை சாக்கு பையில் அடைத்து பாதுகாப்பாக மரக்கட்டா வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டது.

Tags

Next Story