குமரிக்கு 92 பேர் அடங்கிய பேரிடர்  மீட்பு குழு வருகை

குமரிக்கு 92 பேர் அடங்கிய பேரிடர்  மீட்பு குழு வருகை

பேரிடர் குழு வருகை

குமரிக்கு 92 பேர் அடங்கிய பேரிடர்  மீட்பு குழு வந்தது

கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை முதல் 22ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. இதனை அடுத்து எச்சரிக்கை கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசின் பேரிடர் மீட்பு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்துக்கும் பேரிடர் மீட்பு குழு நேற்று மாலை வந்தது. இந்த குழுவினர் சென்னையில் இருந்து போலீஸ வாகனம் மூலம் நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர்.

இதில் 92 பேர் உள்ளனர். இது தவிர மீட்பு பணிக்காக மோட்டார்கள், மின்விளக்குகள், மிதவை படகு, மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களையும் கொண்டு வந்து உள்ளனர். அந்த உதாரணங்களை ஆயுதப்படைமைதானத்தில் வைத்து ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து 92 பேரும் 2 குழுக்களாக பிரிந்து மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கக் கூடிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 32 பேர் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்கும், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 62 பேர் கிள்ளியூர் தாலுகாக்கும் அனுப்பப்பட்டனர்.

Tags

Next Story