ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம்

ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம்

சான்றிதழ் வழங்கல் 

ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தின்(NAAC) சார்பாக கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கல்லூரியின் மாணவர்களின் சேர்க்கை விபரம், தேர்ச்சி விபரம், ஆசிரியர்களின் தகுதி மற்றும் அவர்களின் செயல்பாடுகள், கல்லூரி கட்டமைப்பு வசதிகள் போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகள் விபரங்கள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின்படி, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஏ பிளஸ்(A+) அங்கீகார தரத்தினை வழங்கி தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 புள்ளிகளுக்கு 3.48 புள்ளிகளை (சிஜிபிஏ) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆய்வில், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றலுக்கான அடிப்படை வசதிகள், நிர்வாகம், நிறுவன மதிப்பு, பாடத்திட்டம் ஆகியவை சிறப்பாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தர மதிப்பீட்டு அமைப்பால் ஏ+ அங்கீகாரத்தை பெற்றதற்கு கல்லூரி ஆசிரியர்களையும், உள்மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர், பொறுப்பாளர்கள், ஆசிரியல்லாத பணியாளர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரை கல்லூரி செயலாளர் கே.கே.பாலுசாமி, நிறுவன தலைவர் ஏ.ராஜமாணிக்கம், பொருளாளர் ஏ.விஜயகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சங்கர சுப்பிரமணியன், இயக்குநர் முனைவர் ஆர்.வெங்கடாசலம் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story