பொன்பாடி சோதனை சாவடியில் கால்நடை துறையினர் முகாம்

பொன்பாடி சோதனை சாவடியில் கால்நடை துறையினர் முகாம்

பறவை காய்ச்சல்

பொன்பாடி சோதனை சாவடியில் கால்நடை துறையினர் முகாம் நடைபெற்றது.

பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு, வராமல் தடுப்பதற்காக கால்நடை துறையினர் சார்பில் ஆந்திரா - தமிழக மாநில எல்லை பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி, தமிழக- - ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. அங்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் மற்றும் கோழிகள் கொண்டு வரும் வாகனங்கள் மீது கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் கொண்ட ஒரு குழுவினர் கிருமி நாசினி தெளித்த பின், திருத்தணி நகருக்கு வருவதற்கு அனுமதிக்கின்றனர்.

இது குறித்து, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது: பறவைக்காய்ச்சலை தடுப்பதற்கு பொன்பாடி சோதனை சாவடி அமைத்து, 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட்களாக கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பணியில் இருந்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மூன்று மாதங்களுக்கு மேலாக பொன்பாடி சோதனையில் சிறப்பு முகாம் அமைத்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story