தூய்மையை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வு போட்டி

கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மையை வலியுறுத்தி நடைபெற்ற நம் நகரம் நம் தூய்மை கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன.. இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர் எம். கே. டி கார்த்திக் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக சில போட்டிகளை அறிவித்துள்ளார்.. நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் உங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அதை என் whatsapp நம்பருக்கு அனுப்புங்கள் முதலில் வெற்றி பெறும் மூன்று நபர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும் எனவும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் ஆறுதல் பரிசு வழங்கப்படும் என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.. இந்த நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு அதை நகர மன்ற தலைவர் எம். கே. டி கார்த்திக் அவரது whatsapp எண்ணிற்கு அனுப்பி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சைக்கிளும் அடுத்த மூன்று நபர்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது.வீட்டிலும் போட்டியில் பங்கேற்ற 1716 பெண்களுக்கு தலா 5கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது. அதேபோல சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

Tags

Next Story