பழனியில் காவலர்களுக்கு வளைகாப்பு நடத்தி அசத்தல்

பழனியில் காவலர்களுக்கு வளைகாப்பு நடத்தி அசத்தல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காவல் நிலையத்தில் வேலை செய்து வரும் இரு பெண் காவலர்களுக்கு வளைகாப்பை நடத்தி முடித்து அசத்தியிருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இரு காவலர்களும் கர்ப்பமாக உள்ளனர். இந்நிலையில் மகளிர் காவல் நிலையத்தில்,

பணிபுரியும் சக காவலர்கள் சார்பில் இருவருக்கும் மகளிர் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி,

நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர்.

Tags

Next Story