பெரம்பலூரில் வங்கிக்கடன் வசதியாக்கல் முகாம்
வங்கிக்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் வங்கிக் கடன் மேளா மாவட்ட வருவாய் அலுவலர பொருப்பில் உள்ள ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் . பெரம்பலூர் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2023-24 ஆம் ஆண்டில் 31.12.2023 வரையிலான நிதியாண்டில் ரூபாய். 363 கோடி மதிப்பிலான கடனுதவிகள் 7,047 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மூன்றாவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் வசதியாக்கல் முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 455 தொழில்மு.னைவோருக்கு ரூபாய் 23.90 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் பெருப்பு ரமேஷ் . பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு மற்றும் அரசு மானிய ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில் முனைவோர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தகுதியும் வாய்ப்பும் உள்ள தொழில், வணிகத் திட்டங்களைக் கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல், நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் இருத்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் வணிகம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் பி.டி.சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ், வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.