எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு அடிப்படை மதிப்பீட்டுத் தோ்வு

எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு அடிப்படை மதிப்பீட்டுத் தோ்வு

எழுத்தறிவு பயிற்சி

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூரில் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு அடிப்படை மதிப்பீட்டுத் தோ்வு நடைப்பெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநநல்லூரில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு இறுதி மதிப்பீட்டுத் தோ்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்கத்தின்கீழ் செயல்படும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு தன்னாா்வலா்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கப்படுகிறது.

மேலநீலிதநல்லூா் வட்டாரத்தில் நிகழாண்டு செயல்படும் 44 எழுத்தறிவு மையங்களில் அடிப்படை எழுத்தறிவு இல்லாத 862 போ் படித்து வருகின்றனா். கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் நிகழாண்டு பிப்ரவரி வரையிலான 6 மாதங்களுக்கு எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில், அவா்களுக்கான இறுதி மதிப்பீட்டுத் தோ்வு நடைபெற்றது.

Tags

Next Story