கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கூடைப்பந்து போட்டி
திருச்சி தெற்கு மாவட்ட கூத்தைப்பார் பேரூர் கழகம்சாற்பாக கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது
திருச்சி தெற்கு மாவட்ட கூத்தைப்பார் பேரூர் கழகம்சாற்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஆண்கள் பெண்கள் பங்குபெறும் கூடைப்பந்து போட்டி திருச்சி திருவெறும்பூர் பெல் ஆலை வளாக மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றவர்களை பாராட்டி உரையாற்றினார். இந்த நிகழ்வில் நன்றியுரை மாவட்ட பிரதிநிதி அசோக்குமார் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், திருவெரம்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஜமால் அணி முதலிடமும், இரண்டாம் இடம் கொங்குநாடு இன்ஜினியரிங் காலேஜ், மூன்றாம் இடம் சென் ஜோசப் கல்லூரி, நான்காம் இடம் ஸ்பீட் டெமோ உள்ளிட்ட அணிகள் பரிசுகளை பெற்றுள்ளன பெண்கள் பிரிவில் பாய்லர் பிளான்ட் மகளிர் குழு முதலிடத்தையும் ஜமால் காலேஜ் இரண்டாம் இடத்தையும் மற்றும் பாய்லர் பிளான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும் மாற்று நேஷனல் காலேஜ் நான்காம் இடத்தையும் பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.
Next Story