நாகர்கோவில் பாரதிய ஜனதா நிர்வாகிக்கு வீடு புகுந்து கத்திக்குத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் பகுதி சேர்ந்தவர் ராஜகோபால் (73) தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்த போது 3பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து ராஜகோபாலை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அறிந்ததும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் தனியார் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வீட்டுக்குள் புகுந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே வந்த கும்பல் கூலிப்படையாக இருக்குமா? எந்த சந்தேகம் எழுதுகிறது.
ஏற்கனவே ராஜகோபால் குடும்பத்தில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.