சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை மோதி தள்ளிய பைக்
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே பேயோடு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஆகாஷ் (14). ஆகாஷ் காட்டு விளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ தினம் மாலை பள்ளி முடிந்து ஆகாஷ் தனது சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பேயோடு அருகே செல்லும்போது நாகர்கோவில் பகுதி பறக்கை என்ற இடத்தை சேர்ந்த அருண்குமார் (23) என்பவர் ஓட்டி சென்ற பைக் ஆகாஷ் சைக்கிள் மீது மோதி தள்ளியது.
இதில் ஆகாஷ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அப்பகுதியினர் ஆகாஷை மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் -க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.