விருதுநகரில் ஆசிரியர் மீது பைக் மோதி விபத்து

X
விருதுநகர் சர்வீஸ் சாலையில் நடந்து சென்ற ஆசிரியர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளனது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே நீச்சல் குளம் அருகே சர்வீஸ் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த ஆசிரியர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சார்ந்தவர் அய்யாதுரை வயது 42 இவர் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று ஐடிஐ மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது அதை காண்பதற்காக பேருந்தில் வந்த அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மாவட்ட விளையாட்டு அரங்கம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது விருதுநகர் பகுதியைச் சார்ந்த ரவி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அய்யாதுரை மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அய்யாதுரை காயம் அடைந்த நிலையில் இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்த ரவியும் காயம் அடைந்துள்ளார். இருவரும் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து அய்யாதுரை அளித்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர.
Tags
Next Story
